இருள் சூளும் சிறிலங்கா – இன்று முதல் 4 மணி நேர மின்வெட்டு

சிறிலங்காவில் இன்று தொடக்கம் நாடளாவிய ரீதியாக நான்கு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வரட்சியால், நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், அண்மையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறினாலும், அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த சில நாட்களாக இடம்பெற்று வந்தது.

அதிகரித்துள்ள மின் பயன்பாட்டுக்கு ஏற்ப, மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாத நிலையில், இன்று தொடக்கம் அதிகாரபூர்வமாக 4 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிறிலங்கா மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த மின்வெட்டு பகலில் 3 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது,

இதன்படி, காலை 8.30 தொடக்கம் 11.30 வரை, 11.30 தொடக்கம் பிற்பகல் 2.வரை, பிற்பகல் 2.30 தொடக்கம் மாலை 5.30 வரை பகலில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

இரவில், 6.30 தொடக்கம் 7.30 வரை, 7.30 தொடக்கம் 8.30 வரை, 8.30 தொடக்கம் 9.30 வரை மின்வெட்டு இன்று முதல் நடைமுறையில் இருக்கும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!