ஒரேயொரு டுவிட்டால் இந்தியாவை பரபரப்பாக்கிய மோடி..!: அப்படியென்ன கூறியிருப்பார்..?

இந்தியாவின், பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 6-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தந்த கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு, பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன் மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றமையும் காணக்கூடியதாகவுள்ளது.

பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்ய உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று திடீரென டுவிட்டரில் ஒரு செய்தியை வெளியிட்டார்.

இன்று காலை 11.45 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முக்கிய செய்தியுடன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அதில் கூறியிருந்தார். தனது உரையை தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகத்தில் பார்க்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்கள் மத்தியில் பேச உள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!