டாக்கா கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் தொகை 19 ஆக உயர்வு

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் உயிரிழந்தோர் தொகை 19 ஆக உயர்வடைந்துள்ளது.

டாக்காவின் பானானி பகுதியில் 22 மாடி கட்டடத்திலேயே நேற்றைய தினம் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

கட்டடத்தில் பல்வேறு துணிக்கடைகள், இணைய சேவை மையங்கள் செயல்பட்டுள்ளது. கட்டடத்தில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியுள்ளது. 8 ஆவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து 11 ஆவது மாடி வரையில் சென்றுள்ளது.

அந்நாட்டு தீயணைப்பு படைகள், இராணுவம், விமானப்படை ஒன்றாக இணைந்து தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டது. தீ விபத்தின் போது உயிர்தப்பிக்க கட்டடத்தில் இருந்து குதித்தவர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களுள் இலங்கைப் பிரஜை ஒருவரும் உள்ளடங்குவதாக வெளிவிவாகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

அத்துடன் இந்த விபத்தில் சிக்குண்ட 73 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களின் பலரது நிலைமைகள் கவலைக்கிடாகவுள்ளதால் உயிரிழப்பு தொகை அதிகரிக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!