மலையகத்தில் வறட்சி ; மவுசாகலை நீர்த்தேக்கத்தின் தற்போதைய நிலை ; மின்தடை நீடிக்குமா ?

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியையடுத்து மத்திய மலைநாட்டின் நீரேந்தும் பிரதேசங்களில் நீர் வற்றியுள்ளதால் தற்போது நாட்டில் மின்தடை அமுலாக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக மலையகத்தில் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை, மலையக பகுதிகளில் ஆறுகளின் நீர் மட்டம் குறைவடைந்து காணப்படுகின்றது. இதனால் மலையகத்தில் காணப்படும் நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் குறைவடைந்துள்ளதுடன் மஸ்கெலியா, மவுசாகலை நீர் தேக்கத்தின் நீரேந்தும் பிரதேசம் நீரற்ற பிரதேசமாக வெறுமையாகக் காணப்படுகின்றது.

இவ்வாறு வறட்சியான காலநிலை நீடிக்குமானால் நீர் மின்னுற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கு பாரிய சவாலான நிலையேற்படும். அத்துடன் மின்தடைகளும் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, அண்மையில் செயற்கை மழை முறையை அரசாங்கம் குறித்த பிரதேசங்களில் வெற்றிகரமாக முன்னெடுத்த போதிலும் தற்போது குறித்த பிரேதசங்களில் மேகக்கூட்டங்கள் காணப்படாத நிலையில், செயற்கை மழையை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நிலையேற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!