கட்­சி­யில் அதி­ரடி காட்ட மைத்­தி­ரி­பால தீர்­மா­னம்!!

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்­றின் பொதுச் செய­லா­ளர்­கள் உட்­பட கட்­சி­க­ளின் இதர பத­வி­க­ளில் அதி­ரடி மாற்­றங்­க­ளைச் செய்ய இறுதி முடி­வெ­டுக்­கப்­பட்­டுள் ளது என­வும், எதிர்­வ­ரும் வாரம் இந்த மாற்­றங்­கள் இடம்­பெ­ற­வுள்­ளன என­வும் செய்­தி­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

நடை­பெ­ற­வுள்ள மாகாண சபைத் தேர்­த­லுக்கு முகங்­கொ­டுக்­கும் வகை­யி­லும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி அதி­ருப்­தி­யா­ளர்­க­ளைச் சமா­ளிக்­கும் நோக்­கி­லும் இந்த மாற்­றங்­களை உட­ன­டி­யா­கச் செய்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்­றின் தலை­வ­ரான மைத்­தி­ரி­பால சிறி­சேன தீர்­மா­னித்­துள்­ளார்.

இந்த மாற்­றத்­தின்­படி சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் பதவி எஸ்.பி.திஸா­நா­யக்­க­வுக்­கும், ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச் செய­லர் பதவி சுசில் பிரே­ம­ஜ­யந்­த­வுக்­கும் வழங்­கப்­ப­ட­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இவர்­கள் இரு­வ­ரும் மகிந்த அணி­யால் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றில் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­த­னர் என்­ப­து­டன், தமது அமைச்­சுப் பத­வி­க­ளைத் துறந்­து­விட்டு தேசிய அர­சி­லி­ருந்து வெளி­யேறி எதி­ரணி வரி­சை­யில் சுயா­தீ­ன­மா­கச் செயற்­ப­டத் தீர்­மா­னித்­துள்ள சு.கவின் 16 பேர் கொண்ட அணி­யில் அங்­கம் வகிக்­கின்­ற­னர்.

அதே­வேளை, சுசில் பிரே­ம­ஜ­யந்த, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் பொதுச் செய­லா­ளர் பத­வி­யில் முன்­னர் இருந்­தார் என்­ப­தும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­னணி ஆகி­ய­வற்­றின் பொதுச் செய­லா­ளர்­க­ளா­கத் தற்­போது அமைச்­சர் துமிந்த திஸா­நா­யக்க மற்­றும் அமைச்­சர் மகிந்த அம­ர­வீர ஆகி­யோர் பதவி வகிக்­கின்­ற­னர்.

இவர்­க­ளுக்கு எதி­ராக சு.கவின் அதி­ருப்­தி­யா­ளர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ள­னர். இந்­த­நி­லை­யில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பாணி­யில் சு.க. மற்­றும் ஐ.ம.சு.முவை முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்க அரச தலை­வர் மைத்­திரி தீர்­மா­னித்­துள்­ளார் என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!