சிறு­பிள்­ளைத்­த­ன­மாக நடக்­காது மக்­க­ளுக்குச் சேவை­யாற்­றுங்­கள்!!

மாநா­கர சபை­யில் ஆட்­சி­ய­மைத்து இரு வாரங்­களே ஆகும் நிலை­யில் ஊழல் நடந்­து­விட்­டது என்று நினைக்­கும் வகை­யில் சிறு­பிள்­ளைத்­த­ன­மாக நடப் பதை விடுத்து மக்­க­ளுக்கு ஆற்ற வேண்­டிய சேவை­க­ளில் பங்­க­ளிப்­புச் செய்­யுங்­கள்.

இவ்­வாறு தெரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை மேயர் இ.ஆர்­னோல்ட்­டுக்கு பாசை­யூர் மக்­கள் சார்­பாக நேற்று மதிப்­ப­ளிக்­கும் நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் விளை­யாட்டு மைதா­னத்­தில் நடந்த இந்த நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.
அவர் தெரி­வித்­தா­வது-,

உள்­ளு­ராட்சி சபைத் தேர்­தல் காலத்­தில் சபை­க­ளைக் கைப்­பற்ற பலத்த போட்­டி­கள் இருந்­தக. ஆனால் தேர்­தல் முடிந்த பின்­ன­ரும் அதில் சிலர் குறி­வை­கின்­ற­னர். அதி­லும் யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யைக் குறி வைக்­கின்­ற­னர். தேர்­த­லில் குறி­வைப்­பது ஜன­நா­யக முறை என­லாம். ஆனால் தேர்­தல் முடிந்த பின்­ன­ரும் குறி­வைப்­பது ஜன­நா­ய­கம் அல்ல.

யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் மேயர் பத­வியை ஏற்று இரண்டு வாரத்­தி­லேயே ஊழல் செய்­து­விட்­டார் என சிலர் கடி­தங்­கள் கொடுக்­கின்­ற­னர். பதவி ஏற்­ற­வு­ட­னேயே ஊழல் செய்­யக் கூடிய சிறப்­பான ஆற்­றல் படைத்­த­வர் என்­பதை எம்­மால் ஏற்க முடி­யாது. சிலர் அவ்­வாறு நினைக்­கும்­படி சிறு­பிள்­ளைத்­த­ன­மாக செயற்­ப­டு­கின்­ற­னர்.

இனி­யா­வது சிறு­பிள்­ளைத்­த­ன­மான செயற்­பா­டு­க­ளில் இருந்து விலகி மக்­க­ளுக்கு ஆற்­று­கின்ற சேவை­யில் பங்­க­ளிப்­புக்­களை கொடுத்­தால் உங்­க­ளுக்­கும் நல்­லது என்­பதை இந்த இடத்­தில் இருந்து கூறிக்­கொள்­கின்­றேன்.

மாந­கர முதல்­வரை கால்­த­டங்­கள் போட்டு வீழ்த்தி விட­லாம் என்று கனவு காணா­தீர்­கள். ஏனெ­னில் அவர் ஒரு சிறந்த கால்­பந்­தாட்ட வீரர் என்­பதை புரிந்து கொள்­ளுங்­கள். அனை­வ­ரும் இணைந்து விளை­யா­டுங்­கள். ஓர­ணி­யாக இணைந்து விளை­யா­டுங்­கள். மக்­க­ளுக்­கான பணி­களை செய்­யுங்­கள்.

நாம் தேசிய அர­சில் நாளை என்ன நடக்­கும் எதிர்­வ­ரும் 10 ஆம் திகதி என்ன நடக்­கும் என்ற சூழ­லில் பய­ணித்­துக் கொண்­டி­ருக்­கின்­றோம்.பொறுப்­புக்­களை சுமந்து செல்­லு­கின்ற எமக்கு பொது­மக்­க­ளின் ஆத­ரவு தொடர்ந்து தேவை.- என்­றார்.

இந்த நிகழ்­வில் தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை. சேனா­தி­ராஜா, மாந­கர சபை­யின் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­கள், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள், பொது­மக்­கள் எனப் பலர் கலந்து கொண்­ட­னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!