திருகோணமலையில் இந்திய கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பல்

இந்திய கடற்படையின் அதிவேக நீருந்து தாக்குதல் படகான INS Cora Divh இரண்டு நாட்கள் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

48.9 மீற்றர் நீளமும், 293 தொன் எடையும் கொண்ட இந்த அதிவேகத் தாக்குதல் படகில், 61 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பணியாற்றுகின்றனர்.

இந்தப் படகு இன்று திருகோணமலையில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.

திருகோணமலையில் தரித்து நிற்கும் இந்திய கடற்படைப் படகில் உள்ள கடற்படையினரும் சிறிலங்கா கடற்படையினரும் கூட்டாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!