உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது பயனற்றது – லால் விஜேநாயக்க

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் எப்போது தொடங்கி, எப்போது முடிவடைகிறது என்று, உச்சநீதிமன்றத்தின் கருத்தை கேட்பது பயனற்றது என்று அரசியலமைப்பு சட்ட நிபுணரான லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபரின் பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார்.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள, சட்டநிபுணர் லால் விஜேநாயக்க,

“ 19 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிபரின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் 30.2 பிரிவு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, அதிபரின் 5 ஆண்டு பதவிக்காலம் தொடங்குவதாக கூறுகிறது.

எனவே, தயாசிறி ஜயசேகரவின் வாதம் அர்த்தமற்றது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறிவது பயனற்ற முயற்சி” என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!