ரணிலின் அறிவிப்புக்கு – அமைச்சர் திசநாயக்க எதிர்ப்பு!!

சமுர்த்தி வங்கி இலங்கை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும் என்று தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு, அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

ஐ.தே.கவின் மே தினக் கூட்டத்தில் சமுர்த்தி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும். ஊழியர் சேம இலாப நிதியமும் நிதியமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது. எனினும், சமுர்த்தி வங்கி எந்தவொரு நிறுவனத்தினாலும் கண்காணிக்கப்படவோ நிர்வகிக்கப்படவோ இல்லை. எனவே, விரைவில் அது மத்திய வங்கியில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்” என்று ரணில் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று முன்னாள் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் பகல் கொள்ளை நடந்துள்ளதுள்ளது சாதாரண மக்களின் பணத்தை தலைமை அமைச்சரின் கைகளுக்கு விட்டுக் கொடுக்க முடியாது. ஏனைய நாடுகளிலும் வறிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இதுபோன்ற வங்கிககள், அந்தந்த நாடுகளின் மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!