கோத்தா மீதான வழக்கிற்கும் கென்சியூலர் அலுவலகத்துக்கும் எவ்வித தொட்புமில்லை – ராஜித

கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு அமெரிக்காவில் வழக்கு தொடுப்பதற்கு அங்குள்ள இலங்கை கன்சியூலர் நாயகம்தான் காரணம் என தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவத்தார்.

பாலிந்த நுவர பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரிளுக்கு நிர்மாணிக்கப்பட்ட காரியாலய திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு, இன்றைய தினம் விமான நிலையத்தில் வைத்து கோத்தபாய ராஜபக்ஷ முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ் இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான விடயங்களை தெரிவிக்கும் நபராவார். கிராம சபை ஒன்றிலேனும் பிரதிநிதித்துவம் இல்லாத நபர், அரசியலுக்கு பிரவேசிப்பது பிரச்சினைக்குரிய விடயமாகும்.

என்றாலும் கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதி வேடபாளராக நியமிக்கப்படுவது எமது வெற்றிக்கு காரணமாகின்றது. ஏனெனில் வடக்கு, கிழக்கு வாக்குகள் எதுவும் அவருக்கு கிடைக்கப்போவதில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!