பாரீசில் நேட்டர்டாம் தேவாலயத்தில் பாரிய தீ விபத்து

பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான நாட்டர்டாம் தேவாலயம் தீவிபத்தில் முற்றிலும் அழிந்து போனது. தலைநகர் பாரீசின் மத்தியப் பகுதியில் அமைந்திருந்த இந்தத் தேவாலயம் 850 ஆண்டுகள் பழமையானது. பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருந்த இந்த தேவாலயத்தில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகம் காரணமாக நெருப்பு வேகமாகப் பரவியது.

தீப்பற்றியதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனாலும் நெருப்பின் தாக்கம் காரணமாக தேவாலயம் முற்றிலும் எரிந்து நாசமானது. தேவாலயம் சேதம் அடைந்தது தனக்கும் நாட்டு மக்களுக்கும் பெரும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன் செய்தி வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!