வடக்கில் இனி ‘அந்தி’ மழை! – நேற்று மட்டும் 7.1 மில்லி மீற்­றர்

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த பல மாதங்­க­ளாக வெயில் வாட்டி வந்த நிலையில், நேற்­று குடாநாட்டின் பல பகு­தி­க­ளில் மழை பெய்­துள்­ளது. பிற்­ப­கல் 1.15 மணி­ய­ள­வில் ஆரம்­பித்த மழை சுமார் ஒரு மணி நேரத்­துக்கு மேலாக நீடித்­தது. பலத்த இடி, மின்­ன­லு­டன் மழை கொட்­டித் தீர்த்­தது. கடும் வெப்­பத்­தால் தவித்து வந்த மக்­க­ளுக்கு இந்­தத் திடீர் மழை பெரு மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது நேற்று மட்­டும் 7.1 மில்லி மீற்­றர் மழை பதி­வா­கி­யுள்­ளது.

வடக்­கின் இடை­நி­லைப் பரு­வப் பெயர்ச்சி மழை ஆரம்­பித்­துள்­ள­தால் தொடர்ந்து மாலை வேளை­க­ளில் மழை பெய்­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் உள்­ளன என்று வானிலை அவ­தான நிலை­யத்­தின் யாழ்ப்­பா­ணம் பிராந்­தி­யக் காரி­யா­ல­யம் தெரி­வித்­தது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!