ரிஎன்ரி ஐ விட சக்திவாய்ந்த குண்டுகள்!

அல்கய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் வெடிபொருளே இலங்கையில் வெடித்த குண்டுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் லெவ்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில், ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே இதை கூறியுள்ளார்.

தாக்குதல்தாரிகள் சில வீடுகளை வாடகைக்கு பெற்றிருந்ததாகவும் TATP வெடிபொருளையே அவர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் நிமல் லெவ்கே தெரிவித்தார்.

Acetone Peroxide எனும் குறித்த இரசாயனப்பொருளை அல்கய்தா போன்ற அமைப்புகளே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர், TNT வெடிபொருளை விடவும் TATP மிகவும் சக்திவாய்ந்தது என நிமல் லெவ்கே குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!