துறைமுக நகருக்காக 100 மில்லியன் டொலர் சீனாவிடம் கடன் பெறுகிறது சிறிலங்கா

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திப் பணிகளுக்காக, 100 மில்லியன் டொலர் கடனை சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து பெறுவதற்கான உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சே இந்த கடனைப் பெறவுள்ளது.

துறைமுக நகருக்கான வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்த 100 மில்லியன் டொலர் கடன் பெறப்படுகிறது. இந்தக் கடன் வட்டியின்றி வழங்கப்படுகிறது என்றும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியில், துறைமுக நகருக்கான நிலத்தடி சுரங்கப்பாதை, கொழும்பு சைத்திய மாவத்தையில் இருந்தான வீதி ஆகியன அமைக்கப்படவுள்ளன.

தற்போதைய வீதி தற்காலிகமானது. காலிமுகத்திடல் மற்றும் கோல்பேஸ் விடுதி ஆகியவற்றுக்கு இடையூறின்றி, புதிய வீதி அமைக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!