ரணிலின் விருந்தைப் புறக்கணித்தார் மைத்திரி!!

8 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு, நேற்று பிற்பகல் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நாடாளுமன்றுக்கு வருகை தந்த அரச தலைவர், தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பெரிதாக எதனையும் கதைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாடாளுமன்ற அமர்வுகள் முடிவடைந்த பின்னர், ரணில் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்தில் மைத்திரி பங்கேற்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.

எனினும் மைத்திரி, தேநீர் விருந்தில் பங்கேற்காது நாடாளுமன்றில் இருந்து வெளியேறி சென்றுள்ளார். ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையே தொடர்ந்து காணப்படும் முறுகல் நிலை காரணமாக மைத்திரி தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்தனர் எனக் கூறப்படுகிறது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!