சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவோர் மற்றும் சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்காவின் பதில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.

‘பொதுமக்கள் அமைதியாக இருந்து, நாட்டில் மீண்டும் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு படையினருக்கு ஒத்துழைக்க வேண்டும்.

30 ஆண்டுகாலப் போரில், இதுபோன்ற பல சம்பவங்களைக் கட்டுப்படுத்திய அனுபவம் சிறிலங்கா காவல்துறைக்கு உள்ளது.

காவல்துறையின் பொறுமையை யாரும் பலவீனமாக கருதி விடக் கூடாது.

சட்டத்தை மீறுவோர் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!