வன்முறையில் ஈடுபட்டோருக்கு எதிராக கடுமையான பிரிவுகளில் வழக்கு – ரணில் உத்தரவு

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைய வன்முறைகளில், ஈடுபட்டதாக கைது செய்யப்படுபவர்களுக்கு எதிராக, சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத்துலக பிரகடனம், மற்றும் அவசரகால விதிகளின் கீழ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவில் தங்கியிருந்த நிலையிலேயே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத்துலக பிரகடன விதிகளுக்கு அமைய, வழக்குத் தாக்கல் செய்யும் ஒரு சந்தேக நபர் மேல் நீதிமன்றத்தில் மாத்திரமே, பிணை கோர முடியும்.

கடந்த 13ஆம் நாள் இரவு அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைளுக்குப் பின்னரே, சிறிலங்கா பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!