மாகாண சபை தேர்தல் நடத்தாவிடின் அது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் -டலஸ் அழகப்பெரும

ஜனாதிபதி தேர்தல் இடம் பெறுவதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்படாது என்ற சூழ்நிலைகளே காணப்படுகின்றது என்று பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தல் நடத்தாவிடின் அது அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும் ஆனால் மக்களின் ஜனநாயக உரிமை பகரிங்கமாக மீறப்பட்டுள்ளமையினை ஏற்றுக் கொள்ள வேணடும். அடிப்படைவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து மாகாண சபை தேர்தல் தொடர்பிலான பேச்சுக்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டன என அவர் தெரிவித்தார்.

இவ்வருடத்தின் இறுதி பகுதியில் இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தல் இடம் பெறாது என்று அரசாங்கம் உறுதியாக குறிப்பிட்டது.

ஆளும் தரப்பினரது உறுதிப்பாடு இன்று உண்மையாகி விட்டது. குண்டு தாக்குதலை தொடர்ந்து நாட்டின் அனைது துறைகளிலும் அதிக கேள்வி நிலையே ஏற்பட்டன.

மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டுமாயின் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான தகைமைகள் அரசாங்கத்திடம் கிடையாது.தேர்தலின் பெறுபேறுகளை முன்கூட்டியே யூகித்துக் கொண்டமையினால் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திற்கு தொடர்ந்து பிரயோகித்த அழுத்தத்தின் காரணமாக மாகாண சபை தேர்தல் தொடர்பில் சில முன்னேற்றகரமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் கடந்த மாதம் 21ம் திகதி குண்டு தாக்குதலை தொடர்ந்து அவையும் மறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. இச்சந்தர்ப்பங்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ளாமல் தேவையற்ற காரணிகளை முன்வைத்தது,2015ம் ஆண்டுக்கு பிறகு மக்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கியுள்ளோம் என்று பெருமதிம் கொள்ளும் அரசாங்கம், மக்களின் அடிப்படை தேரதல் உரிமை தொடர்பில் கவனத்தில் கொள்ளவில்லை.

தமது அரசியல் தேவைகளுக்காக மக்களின் ஜனநாயக உரிமைகள் பகிரங்கமாகவே மீறப்பட்டுள்ளது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!