ஷரியா பல்கலைக்கழகத்திற்கு அனுமதி இல்லை! – ரணில்

கிழக்கில் ஷரியா பல்கலைக்கழகத்திற்கான அனுமதி வழங்கப் போவதில்லை என்றும், மத்ரஸா கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வந்து செயற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிழக்கின் ஷரியா பல்கலைக்கழகம் மற்றும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விரிவாக கலந்துரையாடி அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்றுள்ள நிலையில், ஷரியா பல்கலைக்கழகத்திற்கான அனுமதியை வழங்காதிருக்கவும் மத்ரஸா கல்வி நிறுவனங்களை கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதே வேளை, நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என்றும் இதனால் எவ்வித தடையுமின்றி பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்குமாறு அனைத்து மாணவர்களையும் கேட்டுக்கொள்வதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!