அவசரகாலச்சட்டம் நீடிப்பு

சிறிலங்காவில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதகாலம் நீடிப்பதற்கான, சிறப்பு அரசிதழ் அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று வெளியிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் சிறிலங்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளை அடுத்து, பாதுகாப்பு படைகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

30 நாட்களுடன் இந்த அவசரகாலச்சட்டம் முடிவடைகின்ற நிலையில், அதனை மேலும் ஒரு மாதத்துக்கு நீடித்து சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!