18 மணிநேரம் பொறுக்க முடியாதா? – கடுப்பான சபாநாயகர்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கு இன்று திகதி ஒன்றை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இதற்கான திகதி ஒன்றை சபாநாயகர் வழங்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் விடுத்த வேண்டுகோளையடுத்து அந்த விவகாரம் சபையில் பெரும் சர்ச்சையாக மாறியது.

இதன் போது கருத்துக்களை தெரிவிப்பதற்காக ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சபாநாயகர் தாராளமாக நேரங்களை வழங்கினார். அதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் அது தொடர்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.

அவர்கள் இருவருமே அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இடம்பெற வேண்டுமென்றும் அதற்கான திகதி வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை முன்வைத்தனர். கருத்துக்கள் முன்வைக்கப்படும்போது சில சமயங்களில் அது பெரும் சர்ச்சையாக மாறியது.

இந்த நிலையில் இன்று கட்சித் தலைவர்கள் கூட்டம் மீண்டும் நடைபெறும். இதில் கலந்துரையாடி திகதியொன்றை வழங்க முடியும். இதுவரை பொறுமைகாத்த உங்களால் இன்னும் 18 மணித்தியாலங்கள் பொறுக்க முடியாதா. நாளை நான் திகதி ஒன்றை பெற்றுத்தருவேன் என சற்று கடுமையான தொனியில் எதிர்க் கட்சியினரிடம்சபாநாயகர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!