அப்பாவிகளை துன்புறுத்தாதீர்கள்! – பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சம்பந்தன் கோரிக்கை

பாது­காப்பு என்ற போர்­வை­யில் அப்­பாவி மக்­க­ளைத் துன்­பு­றுத்த வேண்­டாம். பயங்­க­ர­வா­தச் சட்­டம், அவ­ச­ர­கா­லச் சட்ட விதி­க­ளைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளைக் கைது­ செய்ய வேண்­டாம். உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள் மற்­றும் சந்­தே­க­ந­பர்­களை இனங்­கண்டு கைது­செய்­யுங்­கள் என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முப்­ப­டைத் தள­ப­தி­கள் மற்­றும் பதில் பொலிஸ்மா அதி­பர் ஆகி­யோ­ரி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் நேற்று நேரில் வலி­யு­றுத்­தி­னார்.

ஜனாதிபதி தலை­மை­யில் நேற்று பாது­காப்­புச் சபைக் கூட்­டம் நடை­பெற்­றது. ஜனாதிபதியின் அழைப்­புக்­கி­ணங்க இதில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னும் கலந்­து ­கொண்­டார். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

‘நாட்­டில் தீவி­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் இடம்­பெற்று அப்­பாவி மக்­க­ளின் உயிர்­கள் பறிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பாது­காப்­பைப் பலப்­ப­டுத்த வேண்­டிய பொறுப்பு பாது­காப்பு அமைச்­ச­ரான ஜனாதிபதிக்கும் முப்­ப­டைத் தள­ப­தி­க­ளுக்­கும் மற்­றும் பொலிஸ்மா அதி­ப­ருக்­கும் உண்டு.

தங்­க­ளின் கூட்டு முயற்­சி­யால் தாக்­கு­தல்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளும், அதன் பின்­னர் நடந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளும் கைது­செய்­யப்­பட்டு வரு­கின்­றார்­கள். இது வர­வேற்­கத்­தக்­கது.

ஆனால், இந்த நட­வ­டிக்­கை­யின்­போது அப்­பாவி மக்­க­ளும் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்­கள். பாது­காப்பு என்ற போர்­வை­யில் அப்­பாவி மக்­க­ளைத் துன்­பு­றுத்த வேண்­டாம். பயங்­க­ர­வா­தச் சட்­டம் மற்­றும் அவ­ச­ர­கா­லச் சட்ட விதி­க­ளைப் பயன்­ப­டுத்தி அவர்­க­ளைக் கைது­செய்ய வேண்­டாம். உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள் மற்­றும் சந்­தே­க­ந­பர்­கள் ஆகி­யோரை இனங்­கண்டு கைது­செய்­யுங்­கள் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!