பிரான்சில் குண்டுவெடிப்பு- 13 பேர் காயம்

Police secures the area during the manhunt of a suspected suitcase bomber in central Lyon, France May 24, 2019. REUTERS/Emmanuel Foudrot – RC11F749A590
பிரான்சின் லயன் நகரில் இடம்பெற்ற பார்சல் குண்டுவெடிப்பில்13 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான லயனில் மக்கள் அதிகமாக காணப்படும் வீதியொன்றில் வெதுப்பகத்திற்கு வெளியே இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இதன் போது எட்டு வயது சிறுமி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

நகரின் வரலாற்று பழமை வாய்ந்த விக்டர் கியுகோ வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாரிய சத்தமொன்று கேட்டது என அருகில் உள்ள ஹோட்டலொன்றின் வரவேற்பாளர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பதற்றமடைற்து ஓடுவதையும் பல அலறல்களையும் கேட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை சைக்கிளில் அந்த பகுதிக்கு வரும் நபர் ஒருவர் குறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து தகவல்களை கோரியுள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!