கொழும்பு துறைமுகம் இலங்கை- இந்தியா- ஜப்பான் கூட்டாக அபிவிருத்தி!

கொழும்பு தெற்கு துறைமுகத்தில் உள்ள கிழக்கு முனைய அபிவிருத்தி தொடர்பில் இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டுறவு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையத்தில் அமையப் பெற்றுள்ளமையினால் இந்நாட்டிலுள்ள துறைமுகங்கள் மிக முக்கிய இடத்தை பெற்றுள்ளது. கொழும்பு துறைமுகமானது இப் பிராந்தியத்திலுள்ள முன்னணி துறைமுகமாகும். இவ்வொன்றினைந்த இணைப்பு திட்டத்தின் மூலமாக இம் மூன்று நாடுகளிடையே காணப்படுகின்ற நீண்டகால புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு செவ்வனே புலப்படுகின்றது.

1980 ஆம் ஆண்டு கால பகுதியில் ஜப்பான், ஜயா கொள்கலன்கள் முனைய அபிவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது. இந்தியாவுடன் தொடர்புபட்டே கொழும்பு துறைமுகத்தின் 70 வீதமான மீள் ஏற்றுமதி வர்த்தகம் முன்னெடுக்கப்படுகின்றது. இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொழும்பு துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி, பிராந்திய நலன் மற்றும் சர்வதேச வர்தக செயற்பாடுகளின் பொருட்டு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!