தமிழர்களின் பிரச்சினையை தீர்க்காமல் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது! – நாடாளுமன்றில் சம்பந்தன்

வடக்கு – கிழக்­கில் நீண்­ட­கா­ல­மா­க­வுள்ள பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­க­ளைக் காணா­மல் இலங்­கை­யில் எந்­த­வொரு பிரச்­சி­னை­யை­யும் தீர்த்­து­விட முடி­யாது என்று எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் நாடா­ளு­மன்­றில் நேற்று தெரி­வித்­தார்.

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை விவா­தத்­தில் பங்­கேற்று உரை­யாற்­றிய இரா.சம்­பந்­தன், “ வடக்கு, கிழக்­கில் நில­வும் மிக­முக்­கிய அர­சி­யல், பொரு­ளா­தார ரீதி­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு கடந்த 70 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இன்­னும் உரி­ய­வ­கை­யில் தீர்­வு­கள் காணப்­ப­ட­வில்லை. இந்­தப் பிரச்­சி­னை­கள் உரி­ய­ வ­கை­யில் தீர்க்­கப்­ப­டும்­ வரை நாட்­டுக்கு மீட்சி இருக்­காது. பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு ஒன்­று­ப­டு­மாறு கேட்­டுக்­கொள்­கின்­றேன்.

குறு­கிய அர­சி­யல் நோக்­கத்­துக்­கா­க­வும், அர­சி­யல் இருப்­பைத் தக்­க­வைத்­துக் கொள்­வ­தற்­கா­க­வும் வடக்கு, கிழக்­குப் பிரச்­சினை தொட­ர­வேண்­டும் என்­பதே சில­ரின் விருப்­ப­மாக இருக்­கின்­றது. பிரிக்­கப்­ப­டாத நாட்­டுக்­குள் சகல குடி­மக்­க­ளும் சம­வு­ரி­மை­யு­டன் வாழும் வகை­யில் இந்­தப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணப்­ப­ட­வேண்­டும் என்­பதே எமது விருப்­ப­மா­கும்.

அர­ச­மைப்­பின் ஊடாக உரி­மை­கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்­டும். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் நோக்­கில் அமைக்­கப்­பட்ட அர­ச­மைப்பு நிர்­ணய சபை­யின் செயற்­பா­டு­கள் கடந்த சில மாதங்­க­ளாக இடம்­பெ­ற­வில்லை. தேர்­தல், கட்சி மாற்­றம் உள்­ளிட்ட கார­ணி­க­ளால் இவை நடக்­க­வில்லை.

எனி­னும், நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு அமை­வாக அதன் செயற்­பா­டு­கள் மீண்­டும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வேண்­டும். முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் 2015ஆம் ஆண்டு தேர்­தல் அறிக்­கை­யில் புதிய அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­பட வேண்­டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

புதிய அர­ச­மைப்­பா­னது நாடா­ளு­மன்­றத்­தில் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யு­டன் நிறை­வேற்­றப்­ப­டு­வ­து­டன், பொது வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­ட­வேண்­டும் என்­பதே அவ­ரு­டைய நிலைப்­பா­டாக உள்­ளது. இத­னால்­தான் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­ன­ரால் இந்த அர­ச­மைப்பு மறு­சீ­ர­மைப்­புப் பணி­களை எதிர்க்­க­மு­டி­யா­துள்­ளது. இந்த நிலைப்­பாட்­டி­லேயே நாங்­க­ளும் இருக்­கின்­றோம்.

கடந்த 30 ஆண்­டு­க­ளாக புதிய அர­ச­மைப்­புத் தயா­ரிக்­கும் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இன்­னும் தொடர்ந்­தும் வரு­கின்­றது. பிள­வு­ப­டாத, பிரிக்­க­மு­டி­யாத நாட்­டுக்­குள் தமிழ் மக்­க­ளும் சம­மான குடி­மக்­க­ளாக வாழக்­கூ­டிய வகை­யி­லான தீர்­வொன்­றையே எதிர்­பார்க்­கின்­றோம். இது புதிய அர­ச­மைப்­பின் ஊடாக வழங்­கப்­பட வேண்­டும். இதனை எவ­ரும் மறுக்க முடி­யாது.

ஏனைய நாடு­கள் முன்­னே­றிச் செல்­வ­தற்கு அர­ச­மைப்­புக்­கள் உத­வி­ய­தைப்­போன்று எமது நாட்­டுக்­கும் புதி­தான அர­ச­மைப்பு தயா­ரிக்­கப்­பட வேண்­டி­யது காலத்­தின் கட்­டா­யம் என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!