தெரிவு குழுவை புறக்கணித்ததன் காரணம் இதுதான் – பந்துல

எதிர்கால அரசியல் நோக்கங்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பு எமக்கு முக்கியமாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே தெரிவு குழுவில் கலந்து கொள்ளவில்லை, மறுபுறம் தெரிவு குழுவின் செயற்பாடுகள் தொடர்பிலும் நம்பிக்கை கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவரதன தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவு குழுவில் பாதுகாப்பு பிரதானிகள் முன்வைக்கும் விடயங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய இரகசிய தகவல்கள். தெரிவு குழுவின் கலந்துரையாடலினை ஊடகங்கள் நேரலை ஒளிப்பரப்பு செய்வது பொருத்தமற்றது.

தெரிவு குழுவன் செயற்பாடுகள் அரசாங்கத்தின் நோக்கத்தினை வெளிப்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடரிபிலான இரகசிய தகவல்களை பகிரங்கப்படுத்துவது புலனாய்வு பிரிவின் மீது ஏனைய புலனாய்வு தரப்பின் முகவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை மழுங்கடிக்க செய்யும்.

பாராளுமன்ற தெரிவு குழுவில் எவற்றை ஊடகங்களுக்கு வழங்க வேண்டுமோ அதை மாத்திரம் அரசாங்கம் வழங்கினால் போதும். பாதுகாப்பு சார் இரகசிய தகவல்களை ஊடகங்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் அல்ல அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் முன்னுபக்கு பின் முரணாகவே காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!