சிறிலங்காவுடனான பேச்சுக்களில் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலர் ஆகியோரைச் சந்தித்து தனித்தனியாகப் பேச்சு நடத்தினார்.

நேற்று முன்தினம் இரவு கொழும்பு வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், நேற்று சிறிலங்கா அரச பிரதிநிதிகள் உள்ளிட்டோரைச் சந்திப்பதில் ஈடுபட்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சர் நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலரைச் சந்தித்த கிளார்க் கூப்பர், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவாகாரங்கள் குறித்துப் பேசியுள்ளார்.

இந்தப் பேச்சுக்களில், சிறிலங்காவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் றொபேர்ட் ஹில்டன் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அதேவேளை, சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவுடனும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், நேற்று பேச்சுக்களை நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் மற்றும், தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

நேற்று முழு நாடும் இருதரப்பு பேச்சுக்கள் நடத்தப்பட்டதாக, தெரிவித்துள்ள கிளார்க் கூப்பர், “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்காக, சிறிலங்காவுடன் நீடித்து வரும் பாதுகாப்புப் பங்காளித்துவத்தையும், செழிப்பையும் மேம்படுத்துவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!