அபுதாபியில் இந்திய இளைஞருக்கு விழுந்த ரூ.18 கோடி குலுக்கல் பரிசு!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த மாதாந்திர பரிசு சீட்டு குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு 18 கோடி ரூபாய் பரிசுதொகை விழுந்துள்ளது. அபுதாபியில் இயங்கி வரும் பிக் டிக்கெட் என்ற நிறுவனம் மாதாந்திர குலுக்கல் நடத்தி விலையுயர்ந்த கார் மற்றும் பணத்தை பரிசு தொகையாக வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த நிறுவனம் நடத்திய ஜூன் மாத குலுக்கலில், கேரளாவை சேர்ந்த சஞ்சய் நாத் என்பவர்,டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக அவருக்கு 10 மில்லியன் திராம்(Dhiram) அதாவது இந்திய மதிப்பில் 18 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசு தொகை விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல் மேலும் 5 இந்தியர்கள் இந்த குலுக்கலில், முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர். குலுக்கலில் பரிசு பெற்ற இளைஞர் சஞ்சய் நாத், பணத்தை குடும்பத்துக்கும், ஏழை, எளிய மக்கள் நலனுக்கும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!