ரஷ்யாவில் மர்மமான முறையில் காணாமல் போன 75 அடி நீள பாலம்!

ரஷ்யாவின் ஆர்க்டிக் பகுதியில் உடைந்து விழுந்த 75 அடி நீள பாலத்தின் பகுதிகள், சில நாட்களுக்குள் முற்றிலும் மாயமான விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவின் முர்மான்ஸ்க் பகுதியில் ஓடும் அம்பா நதியின் குறுக்கே சுமார் 75 அடி நீள பாலம் கட்டப்பட்டிருந்தது. இந்த பாலமானது கடந்த மாதம் இடிந்து விழுந்ததாக இணையத்தில் சில புகைப்படங்கள் பரவின. இந்த நிலையில் பாலம் இடிந்து விழுந்த 10 நாட்கள் கழித்து அந்த இடத்தில் பாலம் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லாத அளவிற்கு உடைந்து விழுந்த பாலத்தின் பாகங்கள் மாயமாகியுள்ளன.

அதுமட்டுமின்றி பாலத்தின் சிதைவுகள் கூட ஆற்றில் ஓடும் நீரிலும் கிடைக்கவில்லை. இரும்பிற்காக இடிந்து விழுந்த பாகங்களை திருடர்கள் திருடிச் சென்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினாலும், சுமார் 56 டன் எடையிலான பாலம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது மர்மமாகவே உள்ளது. இதுகுறித்து உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!