முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவி விலகியமை பொருத்தமற்றது – மஹிந்த

அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்கள் கூட்டாக பதவி விலக பல்வேறு ஏதுவான காரணிகள் காணப்பட்டாலும் நெருக்கடி நிலையில் பதவி விலகியமை பொருத்தமற்ற செயற்பாடாகும். இச்செயற்பாடு முஸ்லிம் அல்லாத சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட கருத்துக்களை தோற்றுவிக்கும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஏப்ரல் 21ம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியினால் பல காரணங்களை முன்னிலைப்படுத்தி தமது அமைச்சு பதவிகளை துறந்த அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷhத் பதியுதீன், மற்றும் எ. எச்.எம். பவ்சீக் ஆகியோர் இன்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்கள்.

பல்வேறு கட்சியினை பிரதிநிதித்துவப்படுததும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முஸ்லிம் மத தலைவர்களின் அறிவுறுத்தல்களும்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முன்னெடுத்த உண்ணாவிரத போராட்டத்தினால் எவ்வித அசம்பாவதங்களும் ஏற்பட்டு விட கூடாது என்பவை பிரதான காரணியாக அமைந்தன. என பதவி விலகிய முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகளும், முஸ்லிம் சமூகமும் ஒருபோதும் தீவிரவாதத்திற்கு துணைபோகவில்லை.இதன் காரணமாகவே 30 வருடகால பயங்கரவாத யுத்தத்தில் பெருமளவு முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் .

முதலில் முஸ்லிம் அரசியல் தலைவர்களை முஸ்லிம் சமூகம் முழுமையாக நம்ப வேண்டும் அதன் பின்னர் ஏனைய இனத்தவர்கள் மத பேதமின்றி முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது சுயமாகவே நம்பிக்கை கொள்வார்கள். என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெஹேலிய ரம்புக்வெல, பந்துல குணவர்தன மற்றும் பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி. எல். பீறிஸ் ஆகியோர் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!