வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்ட ‘நட்பு மரம்’ பட்டுப்போனது!

முதலாம் உலகப்போரின்போது பிரான்சில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறையிலிருந்து ஓக் மரக்கன்றை அமெரிக்காவுக்கு அப்போது அவர் எடுத்து சென்றார். இதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக, அந்த ஓக் மரக்கன்றை மெக்ரான், டிரம்புக்கு பரிசாக வழங்கினார். அதன் பின்னர் டிரம்ப் மற்றும் மெக்ரான் ஆகிய இருவரும் இணைந்து வெள்ளை மாளிகை பகுதியில் ஓக் மரக்கன்றை நட்டனர்.

இதனால் இது நட்பு மரம் என அழைக்கப்பட்டு, உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துவந்தது. இந்த நிலையில் அந்த ஓக் மரக்கன்று பட்டுப்போய் விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முறையான பராமரிப்பின்மையே மரக்கன்று பட்டுப்போனதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!