பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டிய நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேரில் ஆய்வு நடத்தினர். பீகார் மாநிலத்தில் என்செபாலிடிஸ் எனும் ஒரு வித மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

அந்த மாநிலத்தின் முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 93 குழந்தைகள் என்செபாலிடிசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்நிலையில் முசாஃபர்பூரில் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேரில் ஆய்வு நடத்தினார்.

இதனையடுத்து அந்த மருத்துவமனையில் பீகார் சுகாதார துறை அமைச்சர் மங்கல் பாண்டே மற்றும் மருத்துவர்களுடன் இதுகுறித்து ஹர்ஷ வர்தன் ஆலோசனை நடத்தினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!