நேருக்கு நேர் இரு விமானங்கள் மோதியதில் விமானிகள் பலி

நியூசிலாந்தில் இரு சிறிய ரக விமானங்கள் மோதியதில் விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நியூஸிலாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்றுமொரு விமானமும் மோதிதலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இச்சம்பவத்தின் போது விமானிகள் மாத்திரமே விமானங்களினுல் இருந்துள்ளனர்.

இதுவரை விபத்திற்கான காரணம் கண்டறியவில்லையெனவும்,சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!