ஜனாதிபதி பதவி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கே உரித்துடையதாகும் -மஹிந்த அமரவீர

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் , கட்சியின் உறுப்பினர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டாரே தவிர ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி பதவி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கே உரித்துடையாகும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற் று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பொதுசன அபிப்ராயம் தொடர்பில் தற்போது குறிப்பிடப்படுகின்றது. இது தேவையற்ற விடயமாகும். அரசாங்கத்திற்கு தேர்தலை நடத்த வேண்டுமாயின் தற்போது மாகாண சபை தேர்தலே முதலில் நடத்த வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் திகதி குறிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்திற்கு விசேட பிரேரணையை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் அவ்வாறு கொண்டு வருமாயின் முழுமையான ஆதரவு வழங்க தயார்.

பொதுத்தேர்தலை நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஒரு பிரேரணையை கொண்டு வந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றினால் மாத்திரமே பாராளுமன்ற பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த முடியும்.

அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான பிரேணையை கொண்டு வந்தால் அதற்கும் ஆதரவு வழங்குவோம். பொதுசன அபிப்ராயத்தை மதித்து அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!