அபிவிருத்தி திட்டத்தால் மாத்திரம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியாது – சம்பிக

நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதால் மாத்திரம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றிவிட முடியாது. அதற்கு அமைச்சரவை விஞ்ஞானபூர்வமானதாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 30 ஆக வரையறுக்கப்பட்டுள்ள போதும் அவற்றை பகிர்வதில் ஒழுங்கு முறைமை பின்பற்றப்பட வில்லை என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்கிடும் போதும் இதனைப் பின்பற்ற வேண்டும். அதுவும் பின்பற்றப்படவில்லை. சில அமைச்சுக்களுக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது. இவ்வாறான சில அமைச்சுக்களுக்கு சிலரது தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு பாரமின்றி அதிகமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள அரச திணைக்களங்களுக்கே அவை வழங்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை. இந்த நிலைமை எதிர்காலத்திலும் மாற்றமடையாவிட்டால் நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

‘ நாட்டைப் பாதுகாத்தல் – நாட்டை உருவாக்குதல் தேசிய வேலைத்திட்டம் ‘ கிரிபத்கொடையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!