நாட்­டின் குடி­மக்­கள் நாங்­க­ளில்லை மைத்­தி­ரி­யின் உரை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது!!

எமது இன அடை­யா­ளங்­களை ஏற்­றுக் கொள்­ளா­மல், சிங்­கள மக்­க­ளின் அடை­யா­ளங்­க­ளையே இந்த நாட்­டின் – தேசத்­தின் அடை­யா­ள­மாக அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் உரை குறிப்­பி­டு­கின்­றது. எமது இன அடை­யா­ளங்­கள் இந்தத் தேசத்­துக்கு உரி­யது என்­பது ஏற்­றுக் கொள்­ளப்­ப­டா­விட்­டால் நாம் இந்த நாட்­டின் குடி­மக்­கள் அல்­லர் என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது என்றே நாம் கருத வேண்­டி­யுள்­ளது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­தார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் கொள்கை விளக்க உரை மீதான விவா­தத் தில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மக்­க­ளின் ஆணை
தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் இனப் பிரச்­சி­னைத் தொடர்­பாக திட்­ட­வட்­ட­து­மா­ன­தும் நிரந்­த­ர­மா­ன­தும் சாதா­ரண சட்­டங்­க­ளால் மாற்­றப்­பட முடி­யா­த­து­மான தீர்­வைப் பெறு­வ­தற்­கான ஆணையை எமது மக்­க­ளி­டம் கோரி­யி­ருந்­தோம். அவர்­க­ளும் எமக்கு ஆமோ­க­மான ஆத­ரவை வழங்கி ஆணை வழங்­கி­யி­ருந்­த­னர். எமது மக்­க­ளின் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட பிர­தி­நி­தி­கள் என்ற வகை­யில் நாம் அந்­தக் கட்­ட­ளை­களை எந்­தக் கார­ணம் கொண்­டும் மீற­மு­டி­யாது என்­பதை நீங்­கள் அறி­வீர்­கள்.

கூட்டு அர­சைச் சேர்ந்­த­வர்­க­ளும் மக்­க­ளுக்கு பல­வி­த­மான வாக்­கு­று­தி­களை வழங்­கி­யி­ருந்­த­னர். அதில் புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தன் மூலம் நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் முறையை இல்­லா­மற் செய்­வது விகி­தா­சார தேர்­தல் முறையை மாற்­று­வது நிலை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டு­வ­தற்கு இனப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வு காண்­பது என்­பன முக்­கி­ய­மா­ன­வை­யா­கும். நாடா­ளு­மன்­றம் அர­சி­யல் நிர்­ணய சபை­யாக மாற்­றப்­பட்டு நீண்­ட­வி­வா­தங்­க­ளின் பின் இடைக்­கால அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இடைக்­கால அறிக்­கை­யில் திருப்­தி­யில்லை

இடைக்­கால அறிக்கை முற்­று­மு­ழு­தாக தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை நிறைவு செய்­யாத போதி­லும் நாம் அதை சில திருத்­தங்­க­ளு­டன் ஏற்­றுக்­கொள்­ளத் தயா­ரா­க­வி­ருந்­தோம். நாம் ஒன்­றி­ணைந்த பிரிக்­கப்­ப­டாத பிரிக்­கப்­ப­ட­மு­டி­யாத நாட்­டுக்­குள் உள்­ளக சுய­நிர்­ண­யம் கூடிய அதி உச்ச அதி­கார பகிர்வு என்ற அடிப்­ப­டை­யில் உத்­தேச அர­ச­மைப்­புக்கு எங்­கள் ஆத­ர­வைத் தரு­வ­தாக மீண்­டும் மீண்­டும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தோம்.

எமது மக்­க­ளால் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாத பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை என்ற கோட்­பாட்­டுக்­கு­கூட நாம் எமது எதிர்ப்பை தெரி­விக்­க­வில்லை. இது­போன்ற சில விட்­டுக்­கொ­டுப்­புக்­களை நாம் புதிய அர­ச­மைப்­பின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வு காணும் நோக்­கத்­து­டன் மேற்­கொண்­டோம். விட்­டுக்­கொ­டுப்­பு­கள் கார­ண­மாக கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாம் பெரும் பின்­ன­டைவை சந்­தித்­தோம் என்­பதை நீங்­கள் அறி­வீர்­கள்.

நாம் எதிர்க்­கட்­சி­யாக இருந்­த­போ­தி­லும் வரவு – செல­வுத்­திட்­டங்­கள் முதல் கொண்டு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்ட சகல தீர்­மா­னங்­க­ளுக்கு நாம் ஆத­ரவை வழங்­கி­னோம். ஒரு நல்­லி­ணக்க நடை­மு­றை­யூ­டாக எல்­லோ­ரும் ஏற்­றுக்­கொள்­ளும் வகை­யில் இனப் பிரச்­சி­னைத் தீர்வை பெற்­றுக்­கொள்­ளும் நோக்­கு­ட­னேயே எங்­க­ளின் ஆத­ரவு அர­சுக்கு வழங்­கப்­பட்­டது.

அரச தலை­வ­ரால் முன்­வைக்­கப்­பட்ட கொள்கை விளக்­க­வு­ரை­யில் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பா­கவோ உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல்­க­ளின்­போது தேக்­க­ம­டைந்த அதன் அடுத்­த­கட்ட நட­வ­டிக்கை தொடர்­பா­கவோ எந்­த­வித கருத்­துக்­க­ளும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. நாம் கடந்த மூன்று ஆண்­டு­க­ளும் கூட்டு அர­சி­னால் தொடர்ந்து ஏமாற்­றப்­பட்­டு­வந்­தோமோ என்ற கேள்­வியை எங்­க­ளுள் எழுப்­பு­கி­றது. அரச தலை­வ­ரின் அறிக்­கை­யில் கூறப்­பட்ட இரு விட­யங்­கள் இனப்­பி­ரச்­சி­னைத் தீர்வு என்­பது திசை திருப்­பப்­பட்­டு­விட்­டதோ என்ற கேள்­வியை உரு­வாக்க தவ­ற­வில்லை.

எமது கலா­சா­ரத்தை புற­மொ­துக்­கல்

தமிழ், முஸ்­லிம், மலை­யக மக்­க­ளின் சமூக கலா­சார துறை­களை உறுதி செய்­வது என்று குறிப்­பிட்ட அறிக்கை அதை­ய­டுத்து நாட்­டின் பெரும்­பான்மை சமூ­க­மான சிங்­கள மக்­க­ளின் கலா­சார உரி­மை­களை பலப்­ப­டுத்தி உறு­தி­செய்து தேசத்­தின் அடை­யா­ள­மாக வலுப்­ப­டுத்­து­தல் என்­பது கவ­னிக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மா­கும். பௌத்­தத்­துக்கு முத­லி­டம் என்று ஏற்­க­னவே முன்­வைக்­கப்­பட்ட கோட்­பாட்­டை­விட இது மேலும் வலி­மை­வாய்ந்­த­தாக காணப்­ப­டு­கி­றது.

பெரும்­பான்மை சமூ­க­மான சிங்­கள மக்­க­ளின் கலா­சார உரி­மை­களை பலப்­ப­டுத்தி உறுதி செய்து தேசத்­தின் அடை­யா­ள­மாக வலுப்­ப­டுத்­து­தல் என்­பது சிங்­கள மக்­க­ளின் கலா­சா­ரத்தை மட்­டுமே இலங்கை என்ற தேசத்­தின் அடை­யா­ள­மாக வெளிப்­ப­டுத்­து­வதை இந்த வார்த்­தை­கள் வெளிப்­ப­டுத்­து­கின்­றன. இன்­னும் சொல்­லப் போனால் தமிழ், முஸ்­லிம், மலை­யக மக்­க­ளின் கலா­சார உரி­மை­கள் இந்த தேசத்­தின் அடை­யா­ளங்­க­ளாக ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தவை என்­பது அந்த வரி­கள் மூலம் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

இப்­ப­டி­யான திட்­ட­மிட்ட நடை­மு­றை­களை தமி­ழர்­களோ முஸ்­லிம்­களோ மலை­யக மக்­களோ ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வது இல்லை என்­பதை இங்கு ஆணித்­த­ர­மாக தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்­றேன். எமது இன அடை­யா­ளங்­கள் இந்த தேசத்­துக்கு உரி­யது என்­பது ஏற்­றுக் கொள்­ளப்­ப­டா­விட்­டால் நாம் இந்த நாட்­டின் குடி­மக்­கள் அல்­லர் என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது என்றே நாம் கருத வேண்­டி­யுள்­ளது.

மாகாண சபை முறைமை

தேசிய நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்க மாகா­ண­சபை முறைமை மேலும் வலுப்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்று அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. உண்­மை­யி­லேயே நியா­ய­மான முறை­யில் தமிழ் மக்­க­ளின் சுய நிர்­ணய உரி­மை­களை ஏற்­றுக்­கொண்டு ஆளு­ந­ரின் எதேச்­ச­தி­கா­ர­மான அதி­கா­ரங்­களை நீக்கி கொழும்பு அர­சின் தலை­யீ­டு­களை தவிர்த்து மாகா­ண­சபை முறைமை வலுப்­ப­டுத்­தப்­ப­டு­மா­யின் அது ஒரு நல்ல விட­யம்­தான். ஆனால், 13ஆவது அர­ச­மைப்­புச் சட்­டத்­தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பு மாகா­ண­ச­பைக்­கான பொலிஸ் காணி அதி­கா­ரம் என்­பன பறிக்­கப்­பட்டு மாகாண சபை­கள் வலு இழந்­து­போய் கிடக்­கின்­றன.

கண்­து­டைப்பு

நிய­திச் சட்­டங்­க­ளைக்­கூட நிறை­வேற்­றி­னா­லும் அவற்றை நடை­மு­றைக்கு கொண்டு வர­மு­டி­யாத நிலையே நில­வு­கி­றது. ஏற்­க­னவே உரித்­தான அதி­கா­ரங்­கள் பறிக்­கப்­பட்ட மாகாண சபை­களை வலுப்­ப­டுத்­து­வது என்­பது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பை­யும் தமிழ் மக்­க­ளை­யும் ஏமாற்­றும் வெறும் கண்­து­டைப்பு என்றே நம்­பு­கி­றேன்.

புதிய அர­ச­மைப்­பின் மூலம் இனப் பிரச்­சி­னைக்கு ஒரு நிரந்­த­ரத் தீர்வு கண்டு நிலை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தும் ஒரு சூழ்­நிலை தவிர்க்­கப்­ப­டு­வ­தற்­கான முன் முயற்­சியே மாகாண சபை­களை வலுப்­ப­டுத்­து­வது என்ற போலி முன்­வைப்­பா­கும். புதிய அர­ச­மைப்பை கிடப்­பில் போடும் திட்­டத்­தின் இன்­னு­மொரு அங்­கமே 20ஆவது அர­ச­மைப்பை நிறை­வேற்றி, நிறை­வேற்று அதி­கா­ரம் கொண்ட அரச தலை­வர் முறையை நீக்­கு­வது என்­றும் கரு­த­வேண்­டி­யுள்­ளது.

அரச தலை­வ­ரால் முன்­வைக்­கப்­பட்ட விளக்க அறிக்கை தமிழ் மக்­க­ளுக்கு எந்­த­வித நம்­பிக்­கை­யூட்­ட­வில்லை என்­ப­தை­யும் இருக்­கும் நம்­பிக்­கையை பல­வீ­னப்­ப­டுத்­தும் வகை­யி­லும் அமைந்­துள்­ளது என்­ப­தை­யும் நான் இங்கு மன­வ­ருத்­தத்­து­டன் தெரி­விப்­ப­து­டன் தொடர்ந்து தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­மா­யின் வீதி­க­ளில் இறங்கி எமது மக்­க­ளு­டன் இணைந்து எமக்கு மீதான ஒடுக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக ஜன­நா­யக வழி­யில் போரா­ட­வேண்­டிய நிலை ஏற்­ப­டும் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!