ஈரான் மீதான தாக்குதலை இறுதி நேரத்தில் ஏன் நிறுத்தினேன் ? டிரம்ப் விளக்கம்

அமெரிக்காவின் தாக்குதலால் 150ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்படலாம் என மதிப்பிடப்பட்டதாலேயே ஈரான் மீதான தாக்குதலை இறுதிநேரத்தில் நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் செய்தியில் டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.

நாங்கள் வியாழக்கிழமையிரவு தாக்குதலை மேற்கொள்வதற்கான முழுமையான தயார் நிலையிலிருந்தோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்காவின் தாக்குதலால் 150 பேர் வரை கொல்லப்படுவார்கள் என எனக்கு தெரிவிக்கப்பட்டதால் தாக்குதல் ஆரம்பிப்பதற்கு பத்து நிமிடத்திற்கு முன்னர் அதனை நிறுத்தினேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆளில்லாத விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்காக 150 பேரை கொல்வது பொருத்தமான நடவடிக்கையில்லை என கருதியதாலேயே தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலை மேற்கொள்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்னர் படையதிகாரிகளுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் அவ்வேளை இந்த தாக்குதல் காரணமாக எத்தனை பேர் கொல்லப்படுவார்கள் என்பது குறித்து மாத்திரமே நான் அறியவிரும்பினேன் என டிரம்ப் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் என்னிடம் 150 பேர் வரை கொல்லப்படுவார்கள் என தெரிவித்தனர் நான் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியமைக்காக 150 பேரை கொலை செய்வது அளவுக்கதிகமான நடவடிக்கை என கருதியதால் தாக்குதலை நிறுத்துமாறு உத்தரவிட்டேன் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்கிய பின்னர் நேற்றிரவு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது உத்தரவை வாபஸ்பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!