மகிந்த அணிக்கு எதி­ராகப் பல­மான கூட்­ட­ணியை அமைப்­ப­தற்குத் திட்­டம்!!

சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆகி­யன இணைந்து அடுத்த தேர்­த­லில் போட்­டி­யி­டு­வது தொடர்­பான அர­சி­யல் செயற்­பா­டு­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன இது சம்­பந்­த­மாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கி­றது.

கடந்த உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் தனித்­துப் போட்­டி­யிட்­ட­தன் கார­ண­மாக ஏற்­பட்ட தோல்­வியை அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன சுட்­டிக்­காட்­டி­ யுள்­ளார்.

தேர்­த­லில் வெற்­றி­பெற வேண்­டு­மா­யின் இரண்டு கட்­சி­க­ளும் இணைந்து போட்­டி­யிட வேண்­டும் என்று அமைச்­சர் யோசனை முன்­வைத்­துள்­ளார்.எது எப்­ப­டி­யி­ருந்­த­போ­தி­லும் அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும் இது சம்­பந்­த­மான சரி­யான பதில் எத­னை­யும் வழங்­க­வில்லை என­வும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, அமைச்­சர் ராஜித கடந்த வாரம் நடை­பெற்ற அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் இந்த விட­யத்­தைக் குறிப்­பிட்­டி­ருந்­தார். ஆனால் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பொதுச் செய­லர் அகில விராஜ், ஐக்­கிய தேசி­யக் கட்சி தனித்­துப் போட்­டி­யி­டும் என்று தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!