சிறிலங்காவில் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து இந்திய – ஜப்பான் பிரதமர்கள் ஆலோசனை

The Prime Minister, Shri Narendra Modi and the Prime Minister of Japan, Mr. Shinzo Abe after signing the agreements, at Akasaka Palace, in Tokyo, Japan on September 01, 2014.
சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் உட்கட்டமைப்புத் திட்டங்களை கூட்டாக முன்னெடுப்பது குறித்து ஜப்பானிய – இந்திய பிரதமர்கள் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒசாகாவில், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, ஆசிய – பசுபிக் இணைப்பு மற்றும் சிறிலங்கா, மியான்மார், பங்களாதேஷ் போன்ற அயல் நாடுகளில் ஜப்பானுடன் கூட்டாக உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து, இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டத்தில் இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!