சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே சோபாவில் கையெழுத்து – ருவன் விஜேவர்த்தன

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாட்டின் நிபந்தனைகள், சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே, அந்த உடன்பாட்டில் அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போது, சோபா உடன்பாடு குறித்து கரிசனை தெரிவித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பதிலளித்துப் பேசிய போதே இவ்வாறு கூறினார்.

தன்னிடமுள்ள நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு அமெரிக்கா தனக்குத் தேவையான நிலங்களை அடையாளப்படுத்தியிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சுசந்த புஞ்சிநிலமே கூறிய குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.

சோபா உடன்பாடு இன்னமும் பேச்சு நிலையிலேயே இருக்கிறது என்றும், அந்த உடன்பாட்டின் நிபந்தனைகள், சிறிலங்காவுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே, அரசாங்கம் கையெழுத்திடும் என்றும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!