ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தயாசிறி ஜயசேகரவின் கூற்றை அலட்டிக்கொள்ளத்தேவையில்லை : வாசுதேவ

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தயாசிறி ஜயசேகரவின் கூற்றை அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அதற்கான சாத்தியமில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

கூட்டு எதிர்க்கட்சியே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்குதொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன இணைந்து செயற்படுவது தொடர்பாக பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன. என்றாலும் தற்போது காலத்தின் தேவையாக இருப்பது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுவதாகும்.

அதற்கான தகுதியான வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்து அறிவிக்கவேண்டும். ஆனால் அவ்வாறான கலந்துரையாடல்கள் இதுவரை இடம்பெற்றதாக தெரியவில்லை.

ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் என அந்த கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருக்கின்றார்.

இதுபோல் இன்னும் பலர் தெரிவித்து வருகின்றனர்.என்றாலும் இந்த கருத்துக்கள் தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளமாட்டோம் என அவர் மேலம் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!