தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையை நிறுவினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபை ஒன்றை நியமித்துள்ளார். கலாநிதி சரத் அமுனுகமவின் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் குழுவில், அதிபர் சட்டவாளர்களான காலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜெல் ஹட்ச், சட்டவாளர் ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் முதலாவது கூட்டம் நேற்றுக் காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த ஆலோசனைச் சபை தனது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சுயாதீனமான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான செயல்முறைகளை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிபர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!