இந்தியா- சிறிலங்கா இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம்

இந்தியப் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை இந்தியாவும் சிறிலங்காவும் பரிமாறிக் கொள்வதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரக பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில்,

”சிறிலங்காவை நோக்கி இரண்டு படகுகள், போதைப்பொருட்களுடன் சென்று கொண்டிருப்பதை, கண்டறிந்த இந்திய கடலோரக் காவல்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு, சிறிலங்கா கடற்படைக்கு தகவல் வழங்கியிருந்தது.

அதன் பின்னர் அந்தப் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

தலிபான் தீவிரவாதிகள் தமது தீவிரவாத செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியை போதைப்பொருள் வணிகம் மூலம் பெறுகின்றனர்.

ஆபிரிக்க கரையோரங்கள் போன்ற இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக பெரும்பாலும் இந்த போதைப்பொருட்கள் சிறிலங்காவுக்கு கடத்தப்படுகின்றன” என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!