பனை நிதியத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்குவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

அத்துடன், இந்த நிதியத்தின் இரண்டு ஆண்டுகளுக்கான செலவினங்களுக்காக, 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

பனை நிதியத்தை உருவாக்குவதற்கான சட்ட வரைவைத் தயாரிப்பதற்கு, சட்டவரைஞரைக் கோரும், வகையில் அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அமைச்சரவையினால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கச் செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கு, 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 15.25 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!