உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- இராணுவத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்ததா?

maheஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே வெளியாகியிருந்த புலனாய்வு தகவல்கள் குறித்து இராணுவத்திற்கு அறிவிக்கப்படவில்லை என இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணை செய்யும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இன்று சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற புலனாய்வு தகவல்கள் குறித்து இராணுவத்திற்கு தெரிவிக்கப்படாதது குறித்து கவலையடைவதாக இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு முன்கூட்டியே தகவல்களை வழங்கியிருந்தால் இது குறித்து முன்கூட்டியே ஆராயப்பட்டிருந்தால் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து தாக்குதலை தவிர்த்திருக்கலாம் என மகேஸ் சேனநாயக்க தெரிவி;த்துள்ளார்.

தாக்குதலின் பின்னர் இராணுவம் உள்ளக விசாரணையொன்றை மேற்கொண்டது என தெரிவித்துள்ள அவர் நாட்டை பாதுகாப்பது இராணுவத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்த விடயத்தில் இலங்கை பின்தங்கியுள்ளது என இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்

குறிப்பாக கொழும்பு சர்வதேச விமானநிலையத்தில் காணப்படும் பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமானநிலையத்தில் பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவேண்டியது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குள் நுழையும் எவரையும் கணணி தொழில்நுட்பம் மூலம் இலகுவாக இனம் காண்பதற்கான தொழில்நுட்பம் அவசியம் எனவும் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் நாடு பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பங்களில் முன்னேற்றம் அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!