பிற மதத்தவர்களை கட்டாய மத மாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமானது – இம்ரான் கான்

மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அதாவது பிற மதத்தவர்களை கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு விரோதமான செயல் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் மதவழிபாட்டு தலங்கள் பாதுகாக்கப்படும். தங்கள் விழாக்களை, பண்டிகைகளை எவ்வித இடையூறும் இன்றி கொண்டாடி மகிழும் வகையில் அவர்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரு இந்துப் பெண்ணைத் திருமணம் செய்தோ அல்லது வேறு சிறுபான்மையினரைத் திருமணம் செய்தோ, முஸ்லிம் மதத்துக்கு எப்படி நாம் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய முடியும் ? அல்லது துப்பாக்கி முனையில் மிரட்டி மதமாற்றம் செய்ய முடியுமா ? என கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இச் செயல் அனைத்தும் முஸ்லிம் மதத்துக்கு விரோதமான செயல் ஆகும். இந்நிலையில் இறைதூதர்கள் நடந்தார்கள், இறைதூதர்களின் பணி கடவுளின் வார்த்தைகளைப் பரப்புவது மட்டுமே என நிழ்வில் கலந்துக்கொண்ட அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!