நாட்டின் நிர்வாக சீர்குலைவினாலேயே முன்நோக்கிப் பயணிக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது : முன்னாள் மத்திய வங்கி ஆளுநர்

நாட்டை முறையற்ற விதத்தில் நிர்வகிப்பதென்பது என்னைப் பொறுத்தவரையில் பாரிய ஊழல் ஆகும். நிர்வாகம் சீர்குலையும் போது எம்மால் முன்நோக்கிப் பயணிக்க முடியாத நிலையேற்படும். தற்போது அத்தகைய சவாலையே எதிர்கொண்டிருக்கிறோம்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் யுத்தம் உட்பட பல்வேறு சவால்கள் காணப்பட்டன. ஆனால் நாங்கள் அவற்றை எதிர்கொண்டோம். மாறாக மக்களின் மீது அந்த பொறுப்பை சுமத்தவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் நாட்டை மீட்டெடுப்பதற்கு நாங்கள் முன்வருவதுடன், அந்தப் பொறுப்பையேற்று சரிவர செயற்படுவோம் என்று முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் ‘எலிய’ அமைப்பினால் நேற்று துபாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!