அமெரிக்க படுகொலைகளின் பின் ஒபாமா விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் என்ன?

வெறுப்பை தூண்டும் விதத்தில் அல்லது இனவெறியை சாதாரணமான விடயமாக சித்தரிக்கும் விதத்தில் கருத்துக்களை வெளியிடும் தலைவர்கள் நிராகரிக்குமாறு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்க மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதல்களிற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் குடியேற்றவாசிகளிற்கு எதிரான கருத்துக்களே காரணம் என குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையிலேயே ஒபாமா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அச்சசூழ்நிலையை அல்லது வெறுப்பை உருவாக்ககூடிய அல்லது இனவெறியை சாதாரண விடயமாக சித்தரிக்ககூடிய வகையில் தலைவர்கள் எவராவது கருத்து வெளியிட்டால் நாங்கள் அவர்களை நிராகரிக்கவேண்டும் என பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

எங்களை போல தோற்றமளிக்காதவர்களை ஆபத்தானவர்களாக சித்தரிக்கும் தலைவர்களை குடியேற்றவாசிகளை எங்களிற்கு ஆபத்தானவர்களாக சித்தரிக்கும் தலைவர்களை நிராகரிக்குமாறும் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்கா ஒரு வகையான மக்களிற்கு மாத்திரம் உரியது என கருத்து வெளியிடும் தலைவர்களை நிராகரிக்குமாறும் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான கருத்துக்களிற்கு எங்கள் அரசியல் வாழ்வில் இடமில்லை,பொதுவாழ்விலும் இடமில்லை என ஒபாமா தெரிவித்துள்ளார்.

நல்லெண்ணம் கொண்ட அனைத்து கட்சிகள் இனங்கள் மதங்களை சேர்ந்த பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இதனை தெளிவாக உரத்த குரலில் தெரிவிக்கவேண்டும் என ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!