30 ஆங்கில ஆசிரியர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் அடுத்த ஆண்டு 30 ஆங்கில தொண்டர் ஆசிரியர்களை சிறிலங்காவுக்கு அனுப்பவுள்ளதாக சிறிலங்காவின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்சுடன் தாம் நடத்திய பேச்சுக்களின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக, அமெரிக்க தூதரகத்துக்கும், சிறிலங்காவின் கல்வி அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்று விரைவில் கையெழுத்திடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிராமப் புற பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் மொழியாற்றலை விருத்தி செய்யும் வகையில் அமெரிக்க ஆசிரியர்கள் ஆங்கில மொழி போதனைகளை நடத்தவுள்ளனர் எனவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!