ஓடும் ரெயிலில் மது கலந்த ஐஸ் கிரீம் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை!

கல்லூரி மாணவி ஒருவர் டெல்லி – ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்லும்போது டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயிலில் உணவு வழங்கும் பணியாளர் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மதுபானம் கலந்த ஐஸ் கிரீமை சாப்பிட வைத்து பாலியல் தொல்லை தந்தனர் என குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் அந்த செய்தியை ரெயில்வே அமைச்சகத்திற்கும் மற்ற ரெயில்வே அதிகாரிகளுக்கும் டுவிட்டரில் ‘டேக்’ (Tag) செய்திருந்தார்.

காவல்துறையில் புகார் அளித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் ஆனால் இச்செய்தியை நான் பதிவிடாமல் விட்டுவிட்டால் நாளை இன்னொரு பெண் அதே டிக்கெட் பரிசோதகரால் பாதிக்கப்படுவார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் கருத்தை கவனத்தில் கொண்ட ரெயில்வே துறை, சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ராஞ்சியை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் சரோஜ் என்பவரை பணியிடை நீக்கம் மற்றும் உணவு வழங்கும் பணியாளரை பணிநீக்கமும் செய்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!